quranm◉

Surah Al-Inshiqaq transliteration

◉ சூரா · ∞

84:1

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ﴿1﴾

Transliteration: Itha alssamao inshaqqat

Translation: (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,

84:2

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿2﴾

Transliteration: Waathinat lirabbiha wahuqqat

Translation: அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

84:3

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ﴿3﴾

Transliteration: Waitha alardu muddat

Translation: மேலும், பூமி விரிக்கப்படும்போது,

84:4

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ﴿4﴾

Transliteration: Waalqat ma feeha watakhallat

Translation: மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,

84:5

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿5﴾

Transliteration: Waathinat lirabbiha wahuqqat

Translation: மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

84:6

يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ﴿6﴾

Transliteration: Ya ayyuha alinsanu innaka kadihun ila rabbika kadhan famulaqeehi

Translation: மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.

84:7

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿7﴾

Transliteration: Faama man ootiya kitabahu biyameenihi

Translation: ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,

84:8

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ﴿8﴾

Transliteration: Fasawfa yuhasabu hisaban yaseeran

Translation: அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.

84:9

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ﴿9﴾

Transliteration: Wayanqalibu ila ahlihi masrooran

Translation: அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.

84:10

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ﴿10﴾

Transliteration: Waamma man ootiya kitabahu waraa thahrihi

Translation: எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,

84:11

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ﴿11﴾

Transliteration: Fasawfa yadAAoo thubooran

Translation: அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,

84:12

وَيَصۡلَىٰ سَعِيرًا ﴿12﴾

Transliteration: Wayasla saAAeeran

Translation: நரகத்தில் நுழைவான்.

84:13

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ﴿13﴾

Transliteration: Innahu kana fee ahlihi masrooran

Translation: ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.

84:14

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿14﴾

Transliteration: Innahu thanna an lan yahoora

Translation: மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.

84:15

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ﴿15﴾

Transliteration: Bala inna rabbahu kana bihi baseeran

Translation: அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.

84:16

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ﴿16﴾

Transliteration: Fala oqsimu bialshshafaqi

Translation: (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!

84:17

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ﴿17﴾

Transliteration: Waallayli wama wasaqa

Translation: இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)

84:18

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿18﴾

Transliteration: Waalqamari itha ittasaqa

Translation: பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!

84:19

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ﴿19﴾

Transliteration: Latarkabunna tabaqan AAan tabaqin

Translation: (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.

84:20

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿20﴾

Transliteration: Fama lahum la yuminoona

Translation: ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.

84:21

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ﴿21﴾

Transliteration: Waitha quria AAalayhimu alquranu la yasjudoona

Translation: அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.

84:22

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ﴿22﴾

Transliteration: Bali allatheena kafaroo yukaththiboona

Translation: அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.

84:23

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ﴿23﴾

Transliteration: WaAllahu aAAlamu bima yooAAoona

Translation: எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.

84:24

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿24﴾

Transliteration: Fabashshirhum biAAathabin aleemin

Translation: ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.

84:25

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ﴿25﴾

Transliteration: Illa allatheena amanoo waAAamiloo alssalihati lahum ajrun ghayru mamnoonin

Translation: எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download